Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சட்டத்தை கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: மோடி பணிப்பு

In இந்தியா
Published: 09:44 GMT, Jul 16, 2017 |
0 Comments
1182
icon_com
This post was written by : Varshini
modi in party leaders meeting

பசுவை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்து செயற்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பசு பாதுகாப்பிற்கு அரசியல் அடையாளம் ஏற்படுத்துவதோ, மதச் சாயம் பூசுவதையோ எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்த பிரதமர், இதனால் நாட்டிற்கு எந்த வகையிலும் நன்மை ஏற்படாதென சுட்டிக்காட்டினார்.

பசுவை தெய்வமாக போற்றும் நம்பிக்கை நாட்டில் விரவிக் காணப்பட்டாலும், அதற்காக சட்டத்தை கையில் எடுத்தால் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவர் என பிரதமர் மோடி இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் அமுல்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மோடி குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg