Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

அமர்நாத் பேரூந்து விபத்து: உயிரிழப்பு அதிகரித்தது (2ஆம் இணைப்பு)

In
Published: 10:08 GMT, Jul 16, 2017 |
0 Comments
1327
This post was written by : Varshini

அமர்நாத் குகைக் கோயிலுக்குச் சென்ற பேரூந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு, சுமார் 30 யாத்திரீகர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த வாரம் 8 யாத்திரீகர்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இன்றைய தினம் இவ்வாறான கோர விபத்து இடம்பெற்றுள்ளமை பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமர்நாத் குகைக் கோயிலுக்கு ஏற்கனவே சுமார் 150,000 யாத்திரீகர்கள் சென்று வந்துள்ளதோடு, மேலும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் அங்கு செல்வதற்கு தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமர்நாத் யாத்திரீகர்கள் சென்ற பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு

அமர்நாத் குகைக் கோயிலுக்கு யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற பேரூந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீர் வழியாக, ஜம்மு – ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றுகொண்டிருந்த பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாரிய பள்ளத்தில் விழுந்ததில் இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் மிகவும் ஆபத்தான நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் அமர்நாத் யாத்திரைக்குச் சென்ற யாத்திரீகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 யாத்திரீகர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

அமர்நாத் குகை கோயிலில் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான யாத்திரீகர்கள் அங்கு செல்வது வழமை. பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காக இம்முறை நாளொன்றிற்கு 7,500 யாத்திரீகர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)