Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கும் பா.ம.க!

In இந்தியா
Published: 10:34 GMT, Jul 16, 2017 |
0 Comments
1196
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
ramadas

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பா.ம.க. புறக்கணிப்பதாக அதன் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ம.க. தலைமை அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கட்சியின் 29ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றிவைத்த அவர், அதன் பின்னர் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

காவிரி மேலாண்மை சபையை அமைப்பதற்கு எந்த கட்சியும் ஆதரவு வழங்காத காரணத்தால் இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக ராமதாஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிகளையும் மக்கள் வெறுத்துவிட்டனர் எனக் குறிப்பிட்ட ராமதாஸ், தமிழகத்தில் ஆட்சியமைக்கும் தகுதி பா.ம.க.விற்கு மாத்திரமே உள்ளதென மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg