Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி அதிகரிக்கப்படும்: ஷிப்லி பாறூக்

In இலங்கை
Published: 10:45 GMT, Jul 16, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Ravivarman
Shibly Farook

காத்தான்குடியில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு அங்கு அமைந்துள்ள ஆதார வைத்தியசாலையிலுள்ள ஆளணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையினது சுகாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நகரான காத்தான்குடியிலேயே சனத்தொகை அடர்த்தியாக மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகையினால் இங்குள்ள காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

அதன்காரணமாக தற்போது இவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட சகல தரங்களையும் கொண்டு 130 பேர் என்ற எண்ணிக்கையிலுள்ள ஆளணியை 280ஆக உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர்.

ஏனைய வைத்தியசாலைகளை விட விஷேட கவனமெடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பௌதீக வளங்களையும் நாங்கள் அபிவிருத்தி செய்து வருகின்றோம். அந்த வகையில் புதிய பல பிரிவுகளையும் வைத்தியசாலையில் நாம் ஆரம்பித்து வருகின்றோம்” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg