Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா, பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதி பாதிப்பு!

In இலங்கை
Published: 11:25 GMT, Jul 16, 2017 |
0 Comments
1255
icon_com
This post was written by : Ravivarman
IMG_3874

நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட கண்டி- நுவரெலியா பிரதான பாதையில் இருந்து பெரட்டாசி தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதை பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு மேல் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், கடந்த 10 வருடங்களாக இப்பகுதிக்கான அரச பேரூந்து சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த பிரதேசத்தில் வாழும் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளாகியுள்ளதுடன், இதுவரை எந்த அரசியல்வாதிகளும் இப்பாதையின் திருத்தம் குறித்து அக்கறை கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதை சீரின்மை காரணமாகவே குறித்த அரச பேரூந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_3928 IMG_3915 IMG_3891 IMG_3809

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg