Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!

In இலங்கை
Published: 12:39 GMT, Jul 16, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Ravivarman

பொகவந்தலாவ, கெசல்கமுவ ஆற்றிற்கு அருகாமையில் டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்க கல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் டின்சின் மற்றும் பலாங்கொடை பகுதியை சேர்ந்த குறித்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் பிணையில் தற்போது விடுவிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 18ம் திகதி ஹற்றன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொகவந்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC05955 DSC05952 DSC05941

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg