Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தேர்தல்: பேனா கொண்டு செல்ல தடை?

In இந்தியா
Published: 14:44 GMT, Jul 16, 2017 |
0 Comments
1169
icon_com
This post was written by : Ravivarman
201707161557343397_500px-Permanent_ink_marker_._L_styvpf

ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்கள் பேனாக்களை வாக்களிக்கும் இடத்துக்கு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இந்திய ஜனாதிபதி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வாக்களிக்க அழியாத மை பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனினும் நாளை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அழியாத மைக்கு பதிலாத மார்க்கர் பெனா பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், வாக்களிக்க செல்லும் போது தேர்தல் அலுவலர்களிடம் தங்களது பேனாக்களை ஒப்படைத்துவிட்டு வாக்களிப்பதற்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ள மார்க்கர் பேனாவை கொண்டு செல்ல வேண்டும். வாக்களித்து திரும்பும்போது மார்க்கர் பேனாவை ஒப்படைத்துவிட்டு தங்கள் பேனாக்களை பெற்று செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg