Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறக்குமதியில் வீழ்ச்சி: வாகன இறக்குமதியாளர் சங்கம் கவலை!

In இலங்கை
Updated: 15:29 GMT, Jul 16, 2017 | Published: 15:29 GMT, Jul 16, 2017 |
0 Comments
1558
This post was written by : Ravivarman

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தவிர வேறு வாகன வகைகள் 39 ஆயிரத்துக்கும் 40 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததாகவும் இது கடந்த மாதத்தில் 13 ஆயிரமாக குறைந்துள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய இறக்குமதி வரி மற்றும் ரூபாயின் பெறுமதி குறைந்துள்ளமை என்பன இந்த இறக்குமதி குறைவுக்கு காரணங்களாக அமைவதுடன், அண்மைக் காலமாக நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இறக்குமதி நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg