Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைக்காதீர்கள்: ரவிகரன்

In இலங்கை
Published: 16:32 GMT, Jul 16, 2017 |
0 Comments
1496
icon_com
This post was written by : Ravivarman

எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முள்ளியவளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது இளைஞர்களின் பலத்தினை தெரிந்தவர்கள் இன்று அரசாங்கத்தில் இனவாதிகளாக இருக்கின்றார்கள்.

முல்லைத்தீவில் சாதித்த எமது இளைஞர்களை எல்லா நாடுகளும் சேர்ந்து மௌனிக்கச் செய்தீர்கள். இளைஞர்களின் சக்தியை யாரும் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

எமது இயற்கையை அழித்து அன்னியக் குடியேற்றங்களை ஏற்படுத்தி எங்களைத் துரத்தலாம் என நினைத்தால் அது வெறும் பகல் கனவு. அவ்வாறனதொரு நிலை ஏற்பட்டால் எமது இளைஞர் சக்தி மேலும் விஸ்வரூபம் எடுக்கும்” என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg