Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சசிகலாவிற்கு சிறையில் சிறப்புச் சலுகைகள்: அதிகாரி ரூபா மீண்டும் வலியுறுத்து!

In இந்தியா
Updated: 03:14 GMT, Jul 17, 2017 | Published: 16:45 GMT, Jul 16, 2017 |
0 Comments
1177
icon_com
This post was written by : Ravivarman
201707161612505633_Roopa-statement-information-Sasikala-Jail-Poes-Garden_SECVPF

சசிகலாவிற்கு சிறையில் சிறப்புச் சலுகைகள் வழங்கியது தொடர்பாக அதிகாரி ரூபா தனது 2-வது அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைத்துள்ளார்.

கர்நாடக உள்துறை செயலாளர், காவல்துறை இயக்குனர் ஆர்.கே. தத்தா, சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ஆகியோருக்கே தனது அறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, ‘ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலாவுக்கு வி.வி.ஐ.பி. வசதி, சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜெயிலில் சசிகலாவை பார்க்க வருபவர்களுக்கு சிறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் அறை அருகில் தனி இடம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெயிலில் பல விஷயங்கள் ஆதாரமின்றி அழிக்கப்பட்டுள்ளன. சசிகலா, தெல்கி தொடர்பான வீடியோ புகைப்பட ஆதாரங்களை ஜெயில் அதிகாரிகள் அழித்துவிட்டனர். சசிகலா இருக்கும் இடத்தை சி.சி.ரி.வி. கண்காணிப்பில் இருந்து விலக்கி வைத்துள்ளனர்.

சசிகலாவுக்கு ஒரு நாளும் சிறை உணவு வழங்கப்படவில்லை. அவர் விரும்பிய உணவுகள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சசிகலாவுக்கு வெளியில் இருந்து பழம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகளே வாங்கி வந்து தருகின்றனர். செல்போனில் தொடர்பு கொண்டு பேச எந்த தடையும் விதிக்கவில்லை.

கடந்த 6 மாதங்களில் சசிகலாவை எந்தெந்த நாளில் யார்-யாரெல்லாம் ஜெயிலில் சந்தித்து பேசினார்கள் என்பது தொடர்பான விவரங்கள் கொண்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டு உள்ளன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg