Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரசு வசமானது நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Updated: 05:30 GMT, Jul 17, 2017 | Published: 02:41 GMT, Jul 17, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Vithushagan
1

மாலபே – சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டது

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர்  கையெழுத்திட்டுள்ளனர்.

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசு  பொறுப்பேற்கிறது

மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு,  இன்று   (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அரசியல்வாதிகள் உட்பட அரச அதிகாரிகள் பலர் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையானது, நவீன வைத்திய உபகரணங்களுடன் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளதோடு, இதன் பெறுமதி சுமார் 3 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. வைத்தியசாலையுடன், அதன் பணியாளர்களும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்த வைத்தியசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எவ்வித கட்டணங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் நெவில் பெர்னாண்மோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இவ் வைத்தியாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg