Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மழைக்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பு (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Published: 03:09 GMT, Jul 17, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Kemasiya
parliament

சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று காலை ஆரம்பமான மழைக்கால கூட்டத்தொடர் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடரின் ஆரம்பத்தில், மறைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான வினோத்கன்னா, காங்கிரஸ் உறுப்பினர் பல்வை கோவர்த்தன் ரெட்டி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அமர்வு நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் அமர்நாத் யாத்திரையின் போது விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் குறித்த யாத்திரையின் போது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களுக்கும் இன்றைய அமர்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆரம்பம்

நாடாளுமன்ற மழைக்கால தொடர் இன்று (திங்கட் கிழமை) ஆரம்பிக்கின்றது. குறித்த தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை 20 அமர்வுகளாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய  அமர்வில் அண்மையில் மரணமடைந்த மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான  வினோத்கன்னா, காங்கிரஸ் உறுப்பினர் பல்வை கோவர்த்தன் ரெட்டி ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுடன் இன்றைய  அமர்வு ஒத்திவைக்கப்படுவதோடு, நாளை முதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபற்றி நாடாளுமன்ற விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், “நடப்பு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினால், அதுபற்றி அவை நடவடிக்கை குழுவிடம் பேசப்படும். அதன் பின்னர் விவாதத்துக்குரிய திகதி மற்றும் நேரம் பற்றி சபைத்தலைவர் முடிவு செய்வார்” என்றார்.

இந்த தொடரில், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவன சட்டத் திருத்தம், அசையா சொத்துகள் ஒழுங்கு முறை மற்றும் கையகப்படுத்தும் சட்டத் திருத்தம், குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி அளிக்கும் உரிமை சட்டத் திருத்தம், மோட்டார் வாகன சட்டத் திருத்தம் உள்ளிட்ட 20 சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை டெல்லி மேற்சபையில் நிலுவையில் உள்ள, ஊழலுக்கு எதிராக குரல்கொடுப்போரை பாதுகாக்கும் சட்டத்தை பரிசீலனைக்கு எடுத்து நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg