Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரையம்பதி பிரதேசத்தில் 30 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி!

In இலங்கை
Updated: 06:01 GMT, Jul 17, 2017 | Published: 05:45 GMT, Jul 17, 2017 |
0 Comments
1297
This post was written by : Vithushagan

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவில் 30 மில்லியன் ரூபாய் செலவில் 87 அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் ஆரையம்பதி பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான  நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், விளையாட்டு, சமுகசேவை, கிராமிய அபிவிருத்தி உள்ளிட்ட பல அத்தியாவசிய தேவைகள் குறித்த அபிவிருத்திப் பணிகள் இங்கு இடம் பெற்று வருகின்றன.

கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தயின்கீழ் 27 வேலைத்திட்டங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 21 திட்டங்களும் கிராமியிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 6 திட்டங்களும் நல்லிணக்கம்சார் பொருளாதார அபிவிருத்தி திட்டத்திட்டத்தின்கீழ் 8 அபிவிருத்தி பணிகளும் பிரமாண அடிப்படையிலான அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 2 திட்டங்களும் இந்திய வீடமைப்புத்திட்டத்தின்கழ் 4 திட்டங்களுமாக அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், பிரதேச திணைக்கள தலைவர்கள் உடள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg