Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மீண்டும் மகுடம் சூடினார் ரோஜர் பெடரர்!

In டெனிஸ்
Updated: 09:05 GMT, Jul 17, 2017 | Published: 05:29 GMT, Jul 17, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Anojkiyan

லண்டன் நகரில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், மரின் சிலிக்கை வீழ்த்தி முன்னணி வீரர் ரோஜர் பெடரர் 8வது முறையாக வாகை சூடியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், உலகின் 3ஆம் நிலை வீரரான சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 7ஆம் நிலை வீரரான குரோஷியாவின் மரின் சிலிக்கை எதிர்கொண்டார்.

பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் இடம்பெற்ற இப்போட்டியில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். முதல் செட்டில் அடைந்த தோல்வியில் இருந்து சிலிச் மீள்வதற்குள் அதிரடியாக விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களையும் 6-1, 6-4 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

இது பெடரர் வெல்லும் எட்டாவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம் விம்பிள்டனை 8 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமையையும் அவரையே சாரும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg