Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் தொடர்: வாகை சூடினார் ஹரிந்தர்

In விளையாட்டு
Updated: 06:33 GMT, Jul 17, 2017 | Published: 06:22 GMT, Jul 17, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Anojkiyan
aan

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்ற விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், இந்தியாவின் ஹரிந்தர் போல் சந்து சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் போல் சந்துவு, முதல்நிலை வீரரான அவுஸ்ரேலியாவின் ரெக்ஸ் ஹெட்ரிக்ஸை எதிர்கொண்டார்.

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், 12-14, 11-3, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் ரெக்ஸ் ஹெட்ரிக்ஸை வீழ்த்தி ஹரிந்தர் போல் சந்து மகுடம் சூடினார்.

இந்த சம்பியன் பட்டத்தோடு நடப்பு ஆண்டில் ஹரிந்தர் வெல்லும் நான்காவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg