Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு!

In இலங்கை
Updated: 08:30 GMT, Jul 17, 2017 | Published: 08:14 GMT, Jul 17, 2017 |
0 Comments
1221
This post was written by : Vithushagan

2017ஆம் ஆண்டுக்கான விசேட நிதி ஒதுக்கீட்டில், திருகோணமலை மாவட்டத்தில் 38 அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால்,இத்திட்டங்களுக்காக 20 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டும் செய்யப்படாமலும் இருக்கின்ற பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்காக மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய மூதூர், தம்பலகாமம், கந்தளாய், வெருகல், குச்சவெளி, கிண்ணியா, தோப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலை அபிவிருத்தி, குழாய் நீர் கிணறுகள், வீதி அபிவிருத்தி என பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்ட மக்கள் பிரநிதிகளின் முன்மொழிவுக்கு அமைய 38 வேலைத்திட்டங்கள் இதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg