Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகாண சபை அதிகாரங்களை நடைமுறைப்படுத்தினால் சுகாதாரத்துறை மேம்படும்: முஹம்மத் நஸீர்

In இலங்கை
Updated: 09:00 GMT, Jul 17, 2017 | Published: 08:12 GMT, Jul 17, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
ALM. Nazeer

அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசு முறையாக நடைமுறைப்படுத்தினால் மாகாண சுகாதாரத்துறை அபிவிருத்தியடையும் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மத் நஸீர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத்துறை எதிர்நோக்கும் சவால்கள் குறித்து, அவர் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்-

கிழக்கு மாகாணத்தில், மாகாண நிர்வாகத்தின் கீழ் 13 ஆதார வைத்தியசாலைகளும், மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் நான்கு வைத்தியசாலைகளும் என மொத்தமாக 17 ஆதார வைத்தியசாலைகள் உள்ளன. இந்த விடயத்தை மத்திய அரசும் ஆச்சரியமாக நோக்குகின்றது.

எனினும், வைத்தியர், தாதியர், மருத்துவ ஊழியர்கள் போன்ற ஆளணி பிரச்சினைகளை கிழக்கு மாகாண சுகாதாரத்துறை எதிர்நோக்கி வருகின்றது.

இப்பிரச்சினைகள் முழு இலங்கையிலும் காணப்பட்டாலும், அரசியலமைப்பில் உள்ளவாறு அதிகாரத்தை மத்திய அரசு வழங்கினால், இவ்வாறான பிரச்சினைகளை மாகாண மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ள முடியும்.

மேலும், மூவின மக்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில் இன விகிதாசாரத்திற்கேற்ப வளப்பங்கீடுகள் இடம்பெற்றேயாக வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg