Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விடுதலைப் போராட்ட வரலாற்றினை இளையவா்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: சத்தியலிங்கம்

In இலங்கை
Published: 09:19 GMT, Jul 17, 2017 |
0 Comments
1232
icon_com
This post was written by : Ravivarman

விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றினை இன்றைய சந்ததிக்குத் தெரியப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது என வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியா – கோவில்குளம் பகுதியிலுள்ள உமாமகேஸ்வரன் நினைவுத் தூபியில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களிடைய உரிமைப் போராட்டத்தில் பங்கு பற்றி இந்த மண்ணுக்காக தங்கள் உறவுகளை, சொந்த பந்தங்களை இழந்த யாராக இருப்பினும் இந்த மண்ணுக்காக இறந்தவர்களை கௌரவிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் விடுதலைப் போராட்டத்தைப்பற்றித் தெரியாத பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் விடுதலைப் போராட்டத்தின் வரலாறு எங்கள் இளையவர்களுக்கு தெரியாது.

எனவே போராட்டத்தின் வரலாறுகளைத் தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. அதற்கான வழிமுறைகளில் நாம் இளையவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்” என அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg