Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதானத்தை நோக்கிய பயணத்திற்கு பிரான்ஸ் ஆதரவு வழங்கும்: ஜனாதிபதி

In ஐரோப்பா
Published: 09:46 GMT, Jul 17, 2017 |
0 Comments
1245
icon_com
This post was written by : Risha

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையில் சமாதான முன்னெடுப்புகளுக்கான பேச்சுவார்த்தைகளை தொடர்வதற்கான அனைத்து முயற்சிகளையும் ஆதரவளிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுடனான சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, இஸ்ரேல் பிரதமரின் அழைப்பின் பேரில் எதிர்வரும் மாதங்களில் இஸ்ரேலுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், சர்வதேச சமூகம் அங்கீகரித்த சமாதான விதிகளின்படி, சமாதானத்தை நோக்கிய அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg