Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேலும் இரு செயற்கை கோள்களை செலுத்த தயாராகிவரும் இஸ்ரோ

In இந்தியா
Published: 09:47 GMT, Jul 17, 2017 |
0 Comments
1225
icon_com
This post was written by : Kemasiya
pslv2_1974034g

செயற்கை கோள்களை விண்ணிற்கு ஏவுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இந்த வருடமும் இரண்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

IRNSS -1H  என்னும் செயற்கை கோளினை ஓகஸ்ட் மாதத்தில் இஸ்ரோ ஏவவுள்ளது. குறித்த கோள் போக்குவரத்து வழிகாட்டி(Navigation)வகை செயற்கை கோளாகும்.
இதே போன்று இந்த ஆண்டு இறுதியில்(ஒக்ரோபர் அல்லது டிசெம்பர்) காலப்பகுதியில் ஜிசாட்-6ஏ என்னும் தொலைத் தொடர்புக்கு உதவும் செயற்கை கோளினை இஸ்ரோ செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா செயற்கைகோள், சந்திராயன் 2 செயற்கைகோள், வெள்ளி கிரக ஆய்வு செயற்கைகோள், என தொடர்ந்தும் செயற்கைகோள்களை செலுத்தி வெற்றி காண்பதற்கு இஸ்ரோ திட்டமிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg