Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன குடியிருப்பு கட்டட அனர்த்தம் ஒரு நாசகார செயல்: புலனாய்வாளர்கள்

In
Updated: 11:03 GMT, Jul 17, 2017 | Published: 11:02 GMT, Jul 17, 2017 |
0 Comments
1297
This post was written by : Risha

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 22 பேரை காவுகொண்ட கட்டட தீ விபத்தானது, மர்ம நபர்களின் நாசகார செயலென சந்தேகிக்கப்படுவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாகாணத்தில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டடமொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தீ வைப்பிற்கான நோக்கம் தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த குடியிருப்பு கட்டடத்தில் உணவகமொன்றில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தங்கியிருந்ததாகவும், அங்கு 29 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வசித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg