Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோபாலகிருஷ்ண காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சிவசேனா!

In இந்தியா
Updated: 11:36 GMT, Jul 17, 2017 | Published: 11:35 GMT, Jul 17, 2017 |
0 Comments
1309
This post was written by : Varshini

எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகின்றமைக்கு, சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதியான யாகூப் மேனனை தூக்கிலிட வேண்டாமென கோரிய ஒருவர், துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதா என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் டுவிட்டரில் இன்று (திங்கட்கிழமை) பதிவிட்டுள்ளார்.

யாக்கூப்பை பாதுகாக்க கோபாலகிருஷ்ண காந்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள சஞ்சய் ராவத், எதிர்க்கட்சிகள் எந்த மனநிலையில் அவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவுசெய்தன என கேள்வியெழுப்பியுள்ளார்.

மும்பை குண்டுவெடிப்புடன் தொடர்புடைய பயங்கரவாதியான யாகூப் மேனனுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் திகதி தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அப்போதைய ஜனாதிபதி அமரர் அப்துல் கலாமுக்கு கடிதம் எழுதிய கோபாலகிருஷ்ண காந்தி, அத்தண்டனையை நிறுத்தி வைக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg