Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்ற சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்: ஜனாதிபதி

In இலங்கை
Published: 15:33 GMT, Jul 17, 2017 |
0 Comments
1236
icon_com
This post was written by : Ravivarman
1_V_Maithri

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்காக சட்ட வரைபு அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

கழிவு முகாமைத்துவம் மற்றும் டெங்கு ஒழிப்புக்கான உள்ளூராட்சி நிறுவன திட்டத்தை தயாரிப்பதற்காக இன்று (திங்கட்கிழமை) இலங்கை மன்றத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை என அரசியல் ரீதியிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், உண்மையில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருக்கவில்லை.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தல் தொடர்பில் முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த சட்டத்திலுள்ள முறைகேடுகள் மற்றும் ஒழுங்கற்ற தன்மை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாத நிலை உருவானது” என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg