Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமழான் விழாவால் பதற்றம்!

In
Published: 15:52 GMT, Jul 17, 2017 |
0 Comments
1241
This post was written by : Ravivarman
dd

ஹிக்கடுவை ஸ்ரீசுமங்கல வித்தியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரமழான் விழாவுக்கு, அப்பாடசாலையின் பழைய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹிக்கடுவை கல்வி வலய பிரிவின் ரமழான் விழாவுக்கே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பாடசாலை அதிபர் மற்றும் பழைய மாணவர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள கிங்தொட சஹிரா வித்தியாலயத்தின் மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் பதற்ற நிலைமையை அடுத்து அப்பாடசாலை மாணவர்களை குறித்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தமது பாடசாலையில் இவ்வாறானதொரு விழா இதற்கு முன்னர் நடத்தப்படவில்லை எனவும், பௌத்த பாடசாலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படுவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்’ பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அழைக்கப்பட்டிருந்த மற்றைய பாடசாலை மாணவர்களின் பங்கேற்பில் முஸ்லிம் கலாசார விழாவாக இந்த விழா இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)