Chrome Badge
Athavan Newsswitch to mobile site switch to desktop site

சிறுபோகத்திற்கான நீர் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து வழங்கப்படும்!

In
Published: 16:02 GMT, Jul 17, 2017 |
0 Comments
1047
This post was written by : Ravivarman
DC2rU4qVwAAYlI7

சிறுபோகத்திற்கு தேவையான நீர் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் ஊடாக வழங்கப்படும் என இலங்கை மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

போவத்தென்ன நீர்த்தேக்கத்தின் மூலம் தொடர்ந்தும் மகாவலி நீர் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் வறட்சியான காலநிலை நிலவுவதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு விவசாய அமைப்புக்களுக்கும் விவசாயிகளுக்கும் மகாவலி அதிகார சபை அறிவித்துள்ளது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை அண்டியப் பகுதியில் கடந்த மழை காலத்தில் சேகரிக்கப்பட்ட மொத்த நீரின் அளவு 14 கோடி 50 இலட்சம் கன மீற்றர்களாகும்.

சிறுபோகத்தின் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக தற்போது மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கோடி கன மீற்றர்களுக்கும் அதிகமான நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பயிர்ச் செய்கைக்காக தொடர்ந்து நீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. சேகரிக்கப்பட்ட நீரில் கடந்த மே மாதம் முதல் இதுவரை ஒன்பது கோடி 40 இலட்சம் கன மீற்றர் நீர் எலஹெர, மின்னேறிய, கிரித்தலை, கவுடுல்ல மற்றும் பராக்கிரம சமுத்திரம் ஆகிய குளங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Delivered by FeedBurner

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)