Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:46 GMT, Jul 17, 2017 | Published: 16:46 GMT, Jul 17, 2017 |
0 Comments
1356
This post was written by : Sivaguru Siva

பிரெசெல்சில் இன்று ஆரம்பமான இரண்டாம்கட்ட பிரெக்ஸிற்பேச்சுகளை முடித்துக்கொண்டு பிரித்தானியாவின் பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் லண்டன் திரும்பியுள்ளார்.

எனினும் பிரெசெல்சில் தங்கியுள்ள பிரித்தானிய குழு எதிர்வரும் வியாளன் வரை பிரெக்ஸிபேச்சுகளில் பங்கெடுக்கும்.

மீண்டும் வியாளனன்று பிரெசெலஸ்; செல்லும் அமைச்சர் டேவிட் டேவிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சுக்குழுத்தலைவர் மிசேல் பார்னியருடன் ஊடகமாநாட்டை நடத்தவுள்ளார்.

பிரித்தானியாவில் வசிக்கும் ஐரோப்பிய ஒன்றியக்குடிமக்கள் மற்றும் ஐரோப்பியஒன்றியநாடுகளில் வசிக்கும் பிரித்தானியர்களின் எதிர்காலம் குறித்து தற்போதைய பிரெக்ஸிற்பேச்சுக்களில் முக்கிய கவனம் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

_96973633_hi040645285

இளவரசர்வில்லியம் தம்பதியினர் போலந்து மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள் சுற்றுப்பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்

இந்தப்பயணத்தில் அவர்களின் இரண்டு பிள்ளைகளான இளவரசர் ஜோர்ஜ் மற்றும் இளவரசி சார்லொத் ஆகியோர் இணைந்துள்ளனர்.

முதற்கட்டமாக இன்று பகல் வார்சோ விமானநிலையத்தை சென்றடைந்த அரச குடும்பத்துக்கு வரவேற்பளிக்கபட்டது.

அரச குடும்பத்தின் இந்த ஐரோப்பியச்சுற்றுப்பயணத்துக்கும் தற்போதைய  பிரெக்ஸிற் பேச்சுக்களுக்கும இடையில்; எந்தவித தொடர்பும் இல்லையெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

_96975970_040647147-1

மலேசியன் எயார் லைன்சுக்கு சொந்தமான எம்-ஐ 17  பயணிகள் விமானம் உக்ரெயினில் சுட்டுவீழத்தப்பட்டதன் மூன்றாம் ஆண்டு இன்று நினைவு கூரப்பட்டது.

2014 யூலை 17 ஆந்திகதி நெதாலாந்திலிருந்து புறப்பட்ட எம்-ஐ 17 விமானம்  உக்ரெயின் வான்பரப்பு ஊடாகப்பறந்தபோது ரஸ்யசார்பு கிளர்ச்சிப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் ரஸ்யத்தரப்பு இதனை மறுத்திருந்தது

விமானத்தில் பயணஞ்செய்த 298 பேரும் இந்த துன்பியலில் பலியாகினர். இன்று விமானச்சிதைவுகள் மீட்க்கப்பட்ட இடத்தில் நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது

_96972032_040590358-1

குடியேறிகளின் பிள்ளைகளுக்கு இத்தாலியக் குடியுரிமை வழங்கும் சட்டத்தை இத்தாலிய பிரதமர் பாவ்லோ ஜெந்திலோனி ஒத்திவைத்துள்ளார்.

இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால் சுமார் எட்டுலட்சம் பேர் இத்தாலிய குடியுரிமையை பெற்றுக்ககொள்ள வழிபிறந்திருக்கும்.

மேற்படி சட்ட மூலத்;தை இத்தாலியப்பிரதமர் ஒத்திவைத்தநகர்வை அதிதீவிர வலதுசாரிகட்சிகள் வரவேற்றுள்ளன. ஆயினும் குடியேறிகளுக்கு ஆதரவான தரப்புகள் ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளன.

_96976073_wedding8

அந்தார்ட்டிக்கா துருவப்பகுதி ஆய்வாளர்கள் இருவர் இன்று அதே துருவப்பகுதியில் சட்டபூர்வமாக திருமணம் செய்துள்ளனர்.

இந்தத் திருமணநிகழ்வுதான் பிரித்தானியாவின் அந்தார்ட்டிக்கா துருவப்பகுதியில் இடம்பெற்ற முதலாவது சட்டபூர்வ திருமணமாகும். இதனை பிரித்தானிய அரசாங்கமும் அங்கீகரித்துள்ளது

ரோம் சில்வெஸ்டர் மற்றும் யூலி போம் ஆகிய இருவரும் அந்தார்ட்டிக்கா துருவப்பகுதி ஆய்வுகூடத்தில் பணியாற்றும் ஆய்வாளர்கள் என்பதால் மேற்படி தம்பதிப்பு துருவப்பகுதியின் ஆய்வுகூடத்தில் சகஆய்வார்களால் திருமண வரவேற்பளிக்கப்பட்டது.

ஆயினும் துருவப்பகுதியில் நிலவும் கடுமையானகுளிர் மற்றும் குறைந்த வெளிச்சம் காரணமாக இருவரினதும் பெற்றோர்கள் இந்த திருமண நிகழ்வில் பங்கெடுக்கவில்லை.

download (1)

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல்வாக்களிப்பு இன்று முடிவடைந்த நிலையில்  பாஜகவின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இந்த தெரிவு செய்யப்பட்டதாக அதன் தேசிய தலைவர் அமித்ஷா அறிவித்தார்.

வெங்கய்யாநாயுடு தற்போது மத்திய அமைச்சராக பதவிவகிப்பதும் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதியுடன் முடிவடைவதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg