Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்றியம் – மெக்ஸிக்கோ வர்த்தக உடன்படிக்கை: ஆதரவளிப்பதாக போர்த்துக்கல் உறுதி

In உலகம்
Published: 05:18 GMT, Jul 19, 2017 |
0 Comments
1368
icon_com
This post was written by : Sylviya

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மெக்சிஸ்கோ உடன்படிக்கை ஒன்றை எட்டுவது தொடர்பில் தன்னால் ஆன ஆதரவை அளிப்பதாக போர்த்துக்கல்லின் ஜனாதிபதி மார்செல்லோ ருபேலோ டி ஷொவுசா தெரிவித்துள்ளார்.

நேற்று மெக்ஸிக்கோ ஜனாதிபதி என்ரிக்கே பெனாநீட்டோவை மெக்ஸிக்கோ நகரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து வட அமெரிக்காவுக்கு அப்பால் சுதந்திர வர்த்தக உறவுகளை பேணுவது தொடர்பில் மெக்ஸிக்கோ அக்கறை செலுத்தி வருகின்றது.

இந்நிலையில், 2000 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மெக்ஸிக்கோவுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் பரந்துபட்ட முறையில் விஸ்தரிப்பது தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றது.

மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையில் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கையின் மூலம், சுமார் 650 மில்லியன் பெறுமதி வாய்ந்த சந்தையை ஈர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேற்படி உடன்படிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகள் இவ்வருட இறுதிக்கு முதல் மேற்கொண்டால் ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவுக்கு இடையிலான வர்த்தகம் துரிதமாக அதிகரிக்கும் என போர்த்துக்கல் தெரிவித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg