Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன் பட்டம் வென்ற பெடரர்-முகுருசா தரவரிசையில் முன்னேற்றம்

In கிாிக்கட்
Published: 06:20 GMT, Jul 18, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Anojkiyan
fer

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ரோஜர் பெடரரும், முகுருசாவும் உலக தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இத்தொடருக்கு முன்னதான 5வது இடத்தில் இருந்த சுவிஸ்சர்லாந்தின் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடிய ஸ்பெயின் டென்னிஸ் வீராங்கனை கர்பின் முகுருசா, 15வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேலும் இறுதிபோட்டி வரை முன்னேறிய அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் 11வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.

அத்தோடு முதலிடத்தில் இருந்த ஏஞ்சலிக் கெர்பர் 3வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். விம்பிள்டன் 2வது சுற்றிலேயே தோல்வியடைந்த கரோலினா பிளிஸ்கோவா நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த 23வது வீராங்கனை இவராவார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg