Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வங்கியின் Apply online வசதி!

In வணிகம்
Published: 07:31 GMT, Jul 18, 2017 |
0 Comments
1822
icon_com
This post was written by : Surenth
Bank of Ceylon

இலங்கை வங்கிகளில் முதற்தர வங்கியாக காணப்படும் இலங்கை வங்கி தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி தனது Apply online வசதியை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

பல்வேறு வசதிகளை கொண்ட வங்கி சேவைகளை தேடிச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இந்த இணைய சேவையை இலங்கை வங்கி அறிமுகம் செய்துள்ளது.

Apply online வசதியானது, வாடிக்கையாளர்கள் தாம் விரும்பிய கிளை ஒன்றில் கடனை பெறுவதற்கான கோரிக்கையை விடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், இணையத்தளத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் எளிதாக சில செயன்முறைகளை பின்பற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

வாடிக்கையாளர்கள், தங்கள் கோரிக்கைகளை ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும் முடியும். இவ்வாறு சமர்ப்பிக்கும் கோரிக்கைகளை உரிய வங்கி கிளைக்கு அனுப்பி அது தொடர்பான செய்தியையும் குறுஞ்செய்தி மூலம் அறிவிக்கும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg