Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு கடனுதவி

In இலங்கை
Updated: 07:31 GMT, Jul 18, 2017 | Published: 07:31 GMT, Jul 18, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Risha
International Monetary Fund

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி எனும் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இரண்டாம் கட்டமாக 167.2 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளது.

மூன்றாண்டு வேலைத்திட்டத்தின் கீழ் 1.45 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக கடந்த வருடம் நவம்பர் 18ஆம் திகதி 162.6 மில்லின் அமெரிக்க டொலர் கடன்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக இத்தொகை வழங்கப்படவுள்ளது.

நிதி தட்டுப்பாட்டை குறைத்தல், அந்நியச் செலாவணி கையிருப்பை மீளக்கட்டியெழுப்பல், பொருளாதார உறுப்பாட்டை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக எளிய நியாயமான வரிமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக இந்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது.

அந்தக் கடனுதவியின் இரண்டாம் கட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் நேற்று தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg