Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலந்து ஜனாதிபதியுடன் பிரித்தானிய அரச தம்பதியர் சந்திப்பு

In
Updated: 10:45 GMT, Jul 18, 2017 | Published: 08:16 GMT, Jul 18, 2017 |
0 Comments
1254
icon_com
This post was written by : Sylviya

போலந்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய அரச தம்பதியர் அந்நாட்டு ஜனாதிபதி அன்ரெஸ் டூடாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

குறித்த பேச்சுவார்த்தை நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய அரச தம்பதியரின் இந்த விஜயம் தொடர்பில் தகவல் வெளியிட்ட கென்சிங்டன் மாளிகை, “போலந்தின் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை பார்வையிடும் பொருட்டு பிரித்தானிய அரச தம்பதியர் போதிய அளவு காலம் செலவழிப்பர். அத்துடன், அவர்கள் பல்வேறுபட்ட தரப்பினரை சந்திக்கவுள்ளனர்” என தெரிவித்திருந்தது.

பிரித்தானியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தகவல்களின் அடிப்படையில், சுமார் 853,000 போலந்து பிரஜைகள் பிரித்தானியாவில் வாழ்ந்து வருவதாகவும் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் பிற நாட்டுப் பிரஜைகளில் 16 சதவீதமானோர் போலந்துப் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg