Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும்!

In
Updated: 13:36 GMT, Jul 19, 2017 | Published: 10:04 GMT, Jul 19, 2017 |
0 Comments
1364
icon_com
This post was written by : Sylviya
10

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா விலகுவது குறித்த பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரி கை வர்ஹோஃப்டாட் (Guy Verhofstadt) தெரிவித்துள்ளார்.

சர்வதேக ஊடகம் ஒன்றினால் நடத்தப்பட்ட செவ்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் உரையாற்றுகையில், கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடத்தப்பட்ட பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சி பெரும்பான்மை ஆசனங்களைப் பெறத் தவறியமைக்கு பிரெக்சிற் தொடர்பில் மேயினால் வகுக்கப்பட்டுள்ள கடும் திட்டங்களே காரணம் என தெரிவித்துள்ளார்.

அதனால், குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் போது தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினும் பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “பிரெக்சிற் என்பது முழு பிரித்தானியாவையும் உள்ளடக்கியது. அதனால் அது முழு பிரித்தானியாவையும் பாதிக்கும். பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் மற்றும் பிரித்தானியர்கள் அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் விடயத்தை பார்க்கிலும் பொதுமக்களின் வாழ்க்கையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்பது அக்கறை செலுத்த வேண்டிய விடயமாகும்.

இதனால், வேறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பல்வேறு தரப்பினர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கருத்து” என தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg