Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டப்பேரவையில் இருந்து கருணாநிதிக்கு விலக்கு!

In இந்தியா
Published: 09:41 GMT, Jul 18, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Varothayan
Karunanidhi-kmxC--621x414@LiveMint

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவைக்கு சென்று கையெழுத்திட்ட நிலையில், தற்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சட்டப்பேரவைக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரி, சபாநாயகரிடம் தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சட்டப்பேரவையில் இதை சபாநாயகர் குரல் வாக்கெடுப்புக்கு விட்டபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் ஆதரவு தெரிவித்ததால், தி.மு.க. கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

94 வயதான கலைஞர் கருணாநிதி, அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு வரும் நிலையில், தி.மு.க. பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டு கட்சியை தலைமையேற்று நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg