Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமுர்த்தி பயனாளிகள் தெரிவை மீளாய்வு செய்யுமாறு சந்திரகுமார் கடிதம்!

In இலங்கை
Published: 10:11 GMT, Jul 18, 2017 |
0 Comments
1148
icon_com
This post was written by : Ravivarman
140-600x400

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் தெரிவை மீண்டும் மீளாய்வுக்குட்படுத்தி பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்யுமாறு சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் மு. சந்திரகுமார் அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “மிக மோசமான போரினால் முழுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு காணப்படுகின்றன. இங்கு வாழ்கின்ற மக்களில் பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். எனவேதான் 2013 ஆம் ஆண்டு இங்கு சமுர்த்தி அறிமுகப்படுத்தும் போது முப்பது வீதமானவர்களுக்கு சமுர்த்தி வழங்கப்பட்டது.

ஆதாவது 11550 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இருந்த போதும் மாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டதன் காரணமாக நாங்கள் அறுபது வீதமானவர்களுக்கு சமுர்த்தியை வழங்குமாறு நாம் கோரியிருந்தோம்.

அதனடிப்படையில் மேலும் சுமார் 11500 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளாக சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு இணக்கம் தெரிவிக்கபட்டிருந்தது. இதுவரை அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தற்போது சமுர்த்தி பயனாளிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெரிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில் அது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளை மீளாய்வு செய்வதற்காக விண்ணப்ப படிவங்கள் வழங்கி பூரணப்படுத்தப்பட்ட போது சரியான தகவல்கள் வழங்கப்படவில்லை இதனால் அது கணினி மயப்படுத்தப்பட்டு கணினி மூலம் புள்ளியிடப்பட்டு புதிய சமுர்த்தி பயனாளிகள் தெரிவு இடம்பெற்ற போதே பொது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே பொருத்தமான ஒரு முறையின் ஊடாக சமுர்த்தி பயனாளிகள் தெரிவுகள் மீளவும் மேற்கொள்ளப்படவேண்டும்.

அத்தோடு போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எனும் வகையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விசேட முன்னுரிமை அளிக்கப்பட்டு சமுர்த்தி உதவி திட்டங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதையும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg