Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீப்பிடித்து எரியும் அடுக்குமாடி கட்டடம்: பொதுமக்களுக்கு பாதிப்பில்லை

In ஐரோப்பா
Updated: 11:13 GMT, Jul 18, 2017 | Published: 10:25 GMT, Jul 18, 2017 |
0 Comments
1266
icon_com
This post was written by : Sylviya

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) தீப்பிடித்து எரிந்துள்ளது.

குறித்த கட்டடத்தின் 7 ஆவது மாடியில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும் அதன் போது பரவிய தீ சுமார் 200 சதுர மீட்டர் தூரத்திற்கு பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீயை கட்டுக்கு கொண்டுவரும் பொருட்டு சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் 21 தீயணைப்பு எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் குறித்த தீ விபத்தில் பொதுமக்கள் எவரும் பாதிப்படையவில்லை என ரஷ்ய அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் 1963 மற்றும் 1970 களில் அமைக்கப்பட்ட புத்தக வடிவிலான எட்டு கட்டடங்களுள் தீப்பிடித்து எரிந்த மேற்படி கட்டடமும் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg