Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டத்தில் ஒருத்தனே என்னை மீண்டும் திரையுலகிற்குள் ஈர்த்தது: ப்ரியா ஆனந்த்

In சினிமா
Updated: 12:26 GMT, Jul 18, 2017 | Published: 12:26 GMT, Jul 18, 2017 |
0 Comments
1567
icon_com
This post was written by : Risha
Priya

கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படமே தன்னை மீண்டும் திரையுலகிற்குள் ஈர்த்தெடுத்தது என நடிகை ப்ரியா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இப்படத்தின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”இனி எந்த படத்திலும் நடிக்க கூடாது என்ற மனநிலையில் இருந்தேன். ஆனால், கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதையை கேட்டதும் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.

மிக சிறந்த படங்களை தயாரிக்கும் எஸ்.ஆர்.பிரபுவின் நிறுவனத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். நிவாஸ்.கே.பிரசன்னா தான் படத்துக்கு இசை என்றதும் எனக்கு நல்ல காதல் பாடல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தற்போது நான் எதிர்பார்த்ததை விட மிகசிறந்த பாடல்கள் கிடைத்துள்ளது” என்றார்.

அசோக் செல்வன் மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில், தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள கூட்டத்தில் ஒருத்தன் படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், ரமானியம் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg