Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைமடுக் குளத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்!

In இலங்கை
Published: 13:45 GMT, Jul 18, 2017 |
0 Comments
1157
icon_com
This post was written by : Ravivarman
002

கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சட்டவிரோத மீன்பிடி வலைகள் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரணைமடு குளத்தில் 150 மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்து வருகின்ற நிலையில், குறித்த குளத்தில் தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையினை பயன்படுத்தி சில மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சிறிய மீன்களும் பிடிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மீன்பிடிக்கு சவால் விடும் வகையில் அவர்களின் செயற்பாடு உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் குறித்த மீன்பிடி முறை தடைசெய்யப்படவில்லை என தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மீனவர்கள், உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

003 001

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg