Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா குறித்த காணொளிகளில் கிரபிக்ஸ் காட்சிகள்: புகழேந்தி குற்றச்சாட்டு

In இந்தியா
Published: 04:17 GMT, Jul 19, 2017 |
0 Comments
1125
icon_com
This post was written by : Elakkiya
201704201315106997_Karnataka-AIADMK-Secretary-interview-we-will-stay-till-end_SECVPF

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுவது தொடர்பில் வெளியாகிய வீடியோ காட்சிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிரபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டவை என அ.தி.மு.க. கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ரூபா அண்மையில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் வகையில் சில ஒளிப்படங்களும் வீடியோ காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில் சிறைத்துறை ரீதியான பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே ரூபா, சசிகலா பெயரை பயன்படுத்துவதாகவும் சட்டத்தின் பிரகாரம், சிறையில் என்ன கொடுக்கப்பட்டுள்ளதோ அவைதவிர சசிகலாவிற்கு கூடுதலாக எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

மேலும், சசிகலா பயன்படுத்தியதாக ஊடகங்களில் வெளியாகும் அறையின் ஒளிப்படங்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் கிரபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி சசிகலா தொடர்பில் வெளியாகும் வீடியோ காட்சிகளை தன்னிடம் ஒப்படைத்தால் அவை பொய்யானவை என்பதை நிரூபித்துக் காட்டுவதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg