Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலாவின் அரசியலமைப்பு தேர்தலை யாராலும் தடுக்க முடியாது: வெளியுறவு அமைச்சர்

In உலகம்
Published: 05:19 GMT, Jul 19, 2017 |
0 Comments
1211
icon_com
This post was written by : Risha

வெனிசுவேலாவில் நடைபெறவுள்ள அரசியலமைப்பு தொடர்பான தேர்தலை யாராலும் தடுக்க முடியாது என வெனிசுவேலா வெளியுறவுத்துறை அமைச்சர் சாமுவேல் மொன்காடா தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பை இயற்றும் வகையில் இத்தேர்தல் நடத்தப்படுமாயின், வெனிசுவேலா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஆனால் ட்ரம்பின் அச்சுறுத்தல்களையும் மீறி எதிர்வரும் 30ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என வெனிசுவேலா அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோவுக்கு எதிராக வெனிசுவேலாவில் கடந்த பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நாடு முழுவதும் நடைபெற்றுவரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் 90இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், மக்கள் ஆதரவை இழந்துள்ள ஜனாதிபதி, உடனடியாக பதவி விலகி புதிய ஜனாதிபதிக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.

ஆனால், எதிர்க்கட்சியினரின் கோரிக்கைக்கு மாறாக ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் விதத்தில் புதிய அரசியலமைப்பை இயற்ற ஜனாதிபதி நிக்கலோஸ் மதுரோ திட்டமிட்டு அதற்கான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சியினரிடையேயும், பொதுமக்களிடையேயும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதேவேளை, வெனிசுவேலாவில் நியாயமான முறையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவரும் அதேவேளை, புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான தேர்தலை நடத்தும் திட்டத்தை வெனிசுவேலா கைவிடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg