Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயிற்சியாளர் ரவிசாஸ்திரியின் சம்பள அறிவிப்பை கண்டு வாயடைத்து போன இரசிகர்கள்

In கிாிக்கட்
Published: 06:26 GMT, Jul 19, 2017 |
0 Comments
1207
icon_com
This post was written by : Anojkiyan
ran

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரியின் சம்பளத்தை, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி அவருக்கு ஆண்டுக்கு இந்திய ரூபா மதிப்பில் 7½ கோடி ரூபா சம்பளமாக வழங்க இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முன்வந்துள்ளது.

கிரிக்கெட் சபை தலைவர் சி.கே.கண்ணா, செயலாளர் அமிதாப் சவுத்ரி, நிர்வாக குழு உறுப்பினர் டயனா எடுல்ஜி, தலைமை செயல் அதிகாரி ராகுல்ஜோரி ஆகியோர் கொண்ட 4 பேர் குழு இந்த சம்பள தொகையை முடிவு செய்துள்ளது.

மேலும், துணை பயிற்சியாளரான சஞ்சய் பங்கருக்கு இந்திய ரூபா மதிப்பில் 2.3 கோடி ரூபாவும், இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாரத் அருணுக்கு 2.20 கோடி ரூபாவும், களத்தடுப்பு பயிற்சியாளரான ஸ்ரீதருக்கு 2 கோடி ரூபாவையும் இக்குழு நிர்ணயித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg