Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் மீது புதிய தடைகள்: அமெரிக்கா அறிவிப்பு

In உலகம்
Updated: 06:57 GMT, Jul 19, 2017 | Published: 06:57 GMT, Jul 19, 2017 |
0 Comments
1349
icon_com
This post was written by : Risha
iran-missile

ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்தத்தை மீறி ஏவுகணை சோதனைகளை நடத்திவரும் ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் புதிய தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயற்பட்ட 16 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதே இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரான், அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி செயற்படுவதாக ட்ரம்ப் நிர்வாகம் கடந்த திங்கட்கிழமை எச்சரித்திருந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், ஈரானின் செயற்பாடுகள் மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் சுபீட்சம் என்பவற்றை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg