Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

க்ரின் மீன் கறி

In
Published: 07:45 GMT, Jul 19, 2017 |
0 Comments
1138
icon_com
This post was written by : Anojkiyan
fig

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள்
பச்சை மிளகாய்-1-2 (விதையுடன் அல்லது விதைகள் இல்லாமல்)
பூண்டு- 1 கூடு
இஞ்சி விழுது- 1 டேபிள் ஸ்பூன்
1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலைகள் தண்டுடன்
மரக்கறி எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம்- 2 நறுக்கியது
தேங்காய் தண்ணீர்- 500 மில்லி
ஷெஸ்ட்(எலுமிச்சை தோல்) மற்றும் ஒரு எலுமிச்சை ஜூஸ் 1 டேபிள் ஸ்பூன்
மீன் சோஸ்- அரை டேபிள் ஸ்பூன்
சிகப்பு சீனி- 500 கிராம்
தோலை நீக்கிய ஹேக் மீன் (காட் மீனின் ஒரு வகை), சதுர வடிவில் வெட்டி கொள்ளவும்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகள் போன்றவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கவும், வழுவழுவென்று அரைக்க கொஞ்சம் மரக்கறி எண்ணெயை தெளித்து தெளித்து அரைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய்யை சூடேற்றி வெங்காயத்தை போட்டு 5 நிமிடங்கள், பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். பிறகு அரைத்து வைத்த பேஸ்ட்டையும் கலந்து 2 நிமிடங்கள் வதக்கவும். தேங்காய் தண்ணீர், எலுமிச்சை தோல், மீன் சோஸ் மற்றும் சீனியை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பிறகு இதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும் இப்பொழுது அதனுடன் வெட்டிய மீன்கள் மற்றும் எலமிச்சை ஜூஸ், உப்பு சேர்த்து மூடி விட வேண்டும். மிதமான தீயில் 3 நிமிடங்கள் மீன் நன்றாக வேகும் வரை வைக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் மீன்களை மட்டும் எடுத்து ஒரு தட்டின் பிரித்து வைத்து தேங்காய் கிரேவியை சுற்றி ஊற்றி நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவ வேண்டும். சூப்பரான க்ரின் மீன் கறி ரெடி!

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg