Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவின் உல்லாசச் சிறை வாழ்வு – பரபரப்பூட்டும் காணொளி (வீடியோ இணைப்பு)

In இந்தியா
Updated: 08:19 GMT, Jul 19, 2017 | Published: 08:19 GMT, Jul 19, 2017 |
0 Comments
1437
This post was written by : Elakkiya

முறைகேடாக சொத்து குவித்து 4 ஆண்டு தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குறித்த  சிறையில் ஒரு கைதி போலன்றி உல்லாசமாக அவர் வாழ்ந்து வருவது தற்போது வெளியாகி உள்ளது. சிறையில் இருக்கும் சசிகலாவின் வீடியோ காட்சிகள் வெளியாகியதை அடுத்து, இவ்விவகாரம் தற்போது அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறித்த வீடியோவை பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர் வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிறையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் இலஞ்சம் வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் சசிகலாவிற்கு உல்லாச வாழ்வை சிறையில் ஏற்படுத்தி உள்ளனர். சசிகலா தற்போது சிக்கியிருப்பதற்கு கர்நாடக மாநில முன்னாள் உள்துறை மந்திரி பரமேஸ்வரின் உதவியாளர் பிரகாஷ் என்பவர் கொடுத்த வாக்குமூலம்தான் காரணமாக அமைந்தது

இது குறித்து விசாரணை நடத்திய டி.ஐ.ஜி,ரூபா சசிகலாவிற்கு சிறையில்  5 அறைகள் கொண்ட தனி இடம், டி.வி., சொகுசு மெத்தை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அனுபவித்து வந்ததை ஆதாரத்துடன் வெளிப்படுத்தி உள்ளார்.

சிறைத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரூபா அறிக்கை சமர்ப்பித்திருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையிலான வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg