Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் அதிகரிப்பு

In இந்தியா
Updated: 10:05 GMT, Jul 19, 2017 | Published: 10:04 GMT, Jul 19, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Elakkiya
edapadi palanasami

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இருமடங்காக அதிகரிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.சட்டமன்றத்தில் இடம்பெற்றுவரும் மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று (புதன்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 55 ஆயிரமாகவுள்ள தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டு ஒரு லட்சத்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியானது, 2 கோடியிலிருந்து 2.5 கோடியாகவும் ஓய்வுபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 12 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாகவும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg