Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளைஞர் ஆற்றல் அபிவிருத்திச் செயற்பாட்டின் கீழ் வேலைத்திட்டங்கள்!

In இலங்கை
Published: 11:41 GMT, Jul 19, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Vithushagan
2

இளைஞர் ஆற்றல் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில்  5 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அபூபக்கர் முஹம்மது ஹனீபா தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்ட வேலைத் திட்டம் தொடர்பாக அவர் மேலும்  தெரிவிக்கையில்,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 75 இளைஞர் ஆற்றல் வெளிப்பாட்டு வேலைத் திட்டங்களில் 5 திட்டங்கள் ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிற்குக் கிடைத்துள்ளன.

தலா ஒவ்வொரு திட்டத்திற்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்குகின்ற அதேவேளை பிரதேச இளைஞர்கள் தமது சேவைப் பங்களிப்பாக தலா 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான மனித உழைப்பை நல்க வேண்டும்.

அதனடிப்படையில் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வேலைத் திட்டமாக இது நிறைவுறுத்தப்படும்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இவ்வேலைத் திட்டங்கள் ஓகஸ்ட் மாதம் 30 திகதி மக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படும்” என்றார்.

3 4

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg