Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நாவுக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உண்டு – ராஜித்த சேனாரத்ன

In இலங்கை
Published: 11:45 GMT, Jul 19, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Arul Jesu
Rajitha-415x260

இலங்கை எந்தவகையான நாடு என்பதனை உணர்ந்துக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையுடன் போராட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் சபை என்பது நாமே எனவும், முட்டாள்களே தமக்கு எதிராக தாமே  உண்ணாவிரதத்தில் ஈடுபடுவர் எனவும் கூறினார்.

ஐ.நாவின் மனித உரிமை தொடர்பான விடயங்களில் இலங்கையும் கையொப்பம் இட்டுள்ளதால், அவர்களுக்கு பதிலளிக்க இலங்கை கடமைபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஹேக் நகரில் விசாரணை நடத்தி கைது செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை, எனினும் ஏனைய அனைத்து விசாரணைகளுக்கும் நாம் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிகாட்டினார்.

ஐ.நாவுடன் மோதி கொண்டதால் கடந்த அரசாங்கம் எதிர்க் கொண்ட விளைவுகளை நாம் அறிவோம், எனவே 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வராவிடின் உலக நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக பல தடைகளை விதித்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இதனை இராஜதந்திர முறையில் அரசாங்கம் அணுகியதே தவிர பதில் வழங்கி காரியங்களை சாதித்துக் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போனோர் விடயம், தமிழ் மக்களின் காணி பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை போன்ற பல தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg