Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மன் அதிபரை சந்திக்கவுள்ள பிரித்தானிய அரச தம்பதியர்

In
Published: 11:49 GMT, Jul 19, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Risha

பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவரது பாரியார் கேட் மிடில்டன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) ஜேர்மன் தலைநகர் பெர்லினுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.

ஜேர்மன் செல்லும் பிரித்தானிய அரச தம்பதியர், அதிபர் அங்கேலா மெர்க்கலுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

பிரித்தானிய அரச தம்பதியர் தமது பிள்ளைகளுடன், நான்கு நாள் விஜயமாக போலந்து தலைநகர் வார்சாவை கடந்த திங்கட்கிழமை சென்றடைந்தனர்.

அதன்படி, நேற்று வடக்கு போலந்தின் கதான்ஸ்க் நகருக்கு விஜயம் செய்த அரச குடும்பத்தினர், போலந்தில் பாரம்பரிய உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர்.

போலந்திற்கான விஜயத்தை தொடர்ந்து இன்று ஜேர்மனிக்கு செல்லும் அரச குடும்பத்தினர் எஞ்சிய தினங்களை அங்கு செலவிடுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg