Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மொஸ்கோவில் பிரபல கட்டடமொன்றில் பாரிய தீ

In ஐரோப்பா
Published: 12:41 GMT, Jul 19, 2017 |
0 Comments
1201
icon_com
This post was written by : Risha

மொஸ்கோவில் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த பிரபல அடுக்கு மாடி கட்டடமொன்றில் பாரிய தீ விபத்தொன்று சம்பவித்துள்ளது.

திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டடத்தின் ஏழாவது மாடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக ரஷ்ய அவசரநிலைகளுக்கான அமைச்சின் மொஸ்கோ கிளை அறிவித்துள்ளது.

குறித்த தீயானது, கட்டடத்தின் 200 சதுர மீற்றர் வரை பரவியுள்ளது. சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே, தீ விபத்தினால் ஏற்படவிருந்த பாரிய ஆபத்து தடுக்கப்பட்டதுடன், எவருக்கும் பாதிப்பு இல்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கட்டடமானது, 1963ஆம் ஆண்டு மற்றும் 1970ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் கட்டப்பட்ட மொஸ்கோவின் எழுச்சியான எட்டு பிரபல புத்தக வடிவ கட்டடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg