Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும்!

In
Updated: 13:03 GMT, Jul 19, 2017 | Published: 13:03 GMT, Jul 19, 2017 |
0 Comments
1299
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நடவடிக்கையானது ஆழமான மற்றும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேலவை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், பிரெக்சிற்றானது பிரித்தானியாவின் எதிர்காலத்தில் அதிக தாக்கம் செலுத்துவதுடன், உள்நாட்டு அரசியலையும் பாதிப்பதாக அமையும் என மேலவையின் ஐரோப்பிய ஒன்றிய குழுவின் அங்கத்தவர் மைக்கல் ஜெய் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவது தொடர்பில் கடந்த ஆண்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குறித்த நடவடிக்கையானது பிரித்தானியாவில் நான்கு பிராந்தியங்களிடையே பெரும் சிக்கலை தோற்றுவித்தது.

வாக்கெடுப்பின்போது இங்கிலாந்தும் வேல்ஸும் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேற ஆதரவாக வாக்களித்த அதேவேளை, ஸ்கொட்லாந்தும், வட அயர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg