Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முறிகண்டியில் யானையின் அட்டகாசம்: பயன்தரும் மரங்கள் நாசம்

In இலங்கை
Published: 14:08 GMT, Jul 19, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Vithushagan

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நேற்று இரவு நுழைந்த யானை ஒன்று பயன்தரு தென்னை மரங்கள், வாழை மரங்கள் உள்ளிட்டவற்றை சேதமாக்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியார் காணிக்குள் நுழைந்த தனித்த யானை ஒன்று காணியில் பயன்தரக்கூடிய நிலையில் இருந்த 30 தென்னைகள் வரை முறித்துள்ளதுடன், அங்கு நாட்டப்பட்டிருந்த வாழை மரங்களையும் சேதமாக்கியுள்ளது.

குறித்த யானை தனித்தே அங்கு வந்ததாகவும், நீண்ட நேர முயற்சியின் பின்னர் யானை துரத்தப்பட்டதாகவும் தெரிவிக்கும் வீட்டு உரிமையாளர், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இரவு 1.00 மணி வரை குறித்த யானையை துரத்த முயற்சி செய்ததாகவும், அயலவர்களின் உதவியுடன் யானையை துரத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலையில் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்கனவே குளங்களின் நீர் வற்றியுள்ள நிலையில் விவசாயம் கைவிடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் யானையின் தாக்கத்தினாலும் மக்கள் நாளாந்தம் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

IMG_4436 IMG_4440

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg